Thursday, 16 January 2014

வியாளத்து பதாகை வானேறி வீசும்
(வானுயர பறக்கும் புலிக்கொடி )
பொன்னி பாய்ந்து மருதம் புகும்...
(வயற்காட்டில் காவேரி பாய்ந்து புகும் )
ஏதலர் அஞரும் ககனம் திகழும் ...
(பகைவர் அஞ்சும் படை திகழும் )
பாணர் பாடும் கோணின் புகழும் ...
(கவிகள் பாடும் இறை புகழும் )
நெடுநீரோடிய சோணாட்டினத்தே !
(இவை யாவும் பேரூங்கடலோடும் சோழ நாட்டிற்கே உடைமை }
களமம் தழைக்கழனியாடும் உழையும்
(நெற்கதிர் தலை சாயும் வயலில் ஆடும் மானும் )
தடப்பள்ளி தழுவாத்துள்ளும் கயலும்
(வாய்க்காலில் தங்காமால் துள்ளும் மீனும் )
கொங்கையாடும் கொன்றை முடி மாந்தரும்
(அழகிய மார்புடைய தாமரையை தலையில் முடித்த பெண்களும்)
நிறைப்புண் தாங்கும் நரைமயிர் மூப்பரும்
(மார்பெங்கும் விழுப்புனுடன் முடி நரைத்த கிழவர்களும்)
வன்பகை கொய்த சோணாட்டினத்தே !
(கொடிய பகையை கூட வெட்டியெறிந்த சோழ நாட்டிற்கே சொந்தம்)
எழிலி முடியாடும் குடைந்தேற்றிய கோபுரம்
(உச்சியில் மேகங்களை முடியாக சூடும் செதுக்கி நிமிர்த்தப்பட்ட கோபுரங்களும்)
பழியில் அம்மை கரண்டையாடும் நூபுரம்
(குற்றமே இல்லாத அழகுடைய மாந்தர் தம் கானுக்காளில் ஆடும் சிலம்பும்)
ஒகரம் ஆடியுதிர் நீவி நூற்த்த சாமரம்
(மயிலாடி உதிர்ந்த இறகை நெய்த சாமரமும் )
ஞஞ்ஞையூட்டு நாரினர் அல்கியாடும் பூமரம்
(மதுவுக்கு ஒத்த போதையேற்றும் மாந்தர் கூடியாட தோதான பூமரமும் )
வாஞ்சங்கை எய்தும் சோணாட்டினத்தே !
(வானுயர் புகழ் கொண்ட சோழ நாட்டிற்கே உரியது)

சோணாட்டு கியாதி



வியாளத்து பதாகை வானேறி வீசும்
பொன்னி பாய்ந்து மருதம் புகும்...
ஏதலர் அஞரும் ககனம் திகழும் ...
பாணர் பாடும் கோணின் புகழும் ...
நெடுநீரோடிய சோணாட்டினத்தே !
களமம் தழைக்கழனியாடும் உழையும் 
தடப்பள்ளி தழுவாத்துள்ளும் கயலும் 
கொங்கையாடும் கொன்றை முடி மாந்தரும்
நிறைப்புண் தாங்கும் நரைமயிர் மூப்பரும்
வன்பகை கொய்த சோணாட்டினத்தே !
எழிலி முடியாடும் குடைந்தேற்றிய கோபுரம்
பழியில் அம்மை கரண்டையாடும் நூபுரம்
ஒகரம் ஆடியுதிர் நீவி நூற்த்த சாமரம்
ஞஞ்ஞையூட்டு நாரினர் அல்கியாடும் பூமரம்
வாஞ்சங்கை எய்தும் சோணாட்டினத்தே ! 
கூச்சல்கள் காதில் இரைகின்றன, ஒரு கனப்பொழுது நிற்கிறேன் 
யாருமற்ற பிரதேசத்தில் யார்யாரோ இறைகின்றனர் 
திரும்பி பார்க்க துணிவின்றி ஓடுகின்றேன் 
என்காலடி ஓசையின் கூட சில குளம்படிகளும் கேட்கிறது 
எருமையுடனானதா என்று செவிகளை கூராக்கினேன், 
கழுதைகள் போல அவை. பொதி சுமக்கும் கணம் காலடிகளில் கேட்டது.
என் கால்களில் பலம் கூட்டி ஓடினேன், ஏனோ நகர மறுத்தன சுற்றி உள்ள உலகம்.
முதுகில் அரிப்பு கூடி பாலமாக வெடிக்கிறது. மோசமோசவென கூசும் உறசல்களுடன்
ரெக்கை முளைக்கிறது. ஏனோ இதுவும் உதவாது போல.
முனுமுனுப்பாய் குறைகூறும் கிழவி ஒருவள் என்னுள்ளே எங்கோ இருந்து
அவளின் வழக்கமான பாடலை பாடினாள்.
ஓடாத கால்கள், சொல்லாததை கேட்கும் செவி, தொடரும் பொதி சுமக்கும் கழுதை,
முனுமுனுக்கும் கிழவி என பல அரிதான பொக்கிஷங்களோடு தொடர்ந்து ஓடுகிறேன்.
பத்தாத குறைக்கு முகநூல் கவுஜைகள் வேறு.
ச்சே ! நான் என்னைக்கு தான் கவிதை எழுத போறேனோ ?
பொதி சுமக்கும் கழுதையின் காலடி பக்கத்தில் கேட்கிறது , நான் கொஞ்சம் வேகமா ஓடனும்.
அப்பறம் பார்க்கலாம். டாட்டா !!
வண்டி ஒன்னு போய்கினுகீது 
சண்டி குதுர கட்டி இஸ்த்துக்குனு 
மண்டி போட்டு எறிகினா 
தண்டி வர போய் வர்லாம் 

தண்டமா தான் நட்ன்து போனாரு காந்தி 
இவுனுங்கோ செய்றத பாத்தா வர்துடா வாந்தி 
உப்புக்கு கூட வரி எங்கடா இருக்கு சாந்தி 
சொத்துக்கு வயிஇல்லை கெடக்கிதுடா பிராந்தி 

ஜீன் குசாம் ஆசாதின் "சென்னை புறநகர் தத்துவ சோலை"
பருதிஞாயிறு வெளியீடு.
அக்கம் திற
ஆக்கம் நினை
இச்சை கொல்
ஈகை குணம்
உச்சம் குறி
ஊனம் பயம்
எச்சம் உன்னேல்
ஏவல் பணியேல்
ஐயம் களை
ஒக்கம் உறவு
ஓக்கம் ஓங்கு
ஔதகம் போற்று
தகும் நாரம் மூன்றாம் 
ஓடும் நாரம் நீரென அறி 
தோன்றும் நாரம் ஊத்தமாம் 
காரின் நாரம் பொழிச்சலாம்
நாரம் ஆயும் உலகை