Thursday 16 January 2014

வியாளத்து பதாகை வானேறி வீசும்
(வானுயர பறக்கும் புலிக்கொடி )
பொன்னி பாய்ந்து மருதம் புகும்...
(வயற்காட்டில் காவேரி பாய்ந்து புகும் )
ஏதலர் அஞரும் ககனம் திகழும் ...
(பகைவர் அஞ்சும் படை திகழும் )
பாணர் பாடும் கோணின் புகழும் ...
(கவிகள் பாடும் இறை புகழும் )
நெடுநீரோடிய சோணாட்டினத்தே !
(இவை யாவும் பேரூங்கடலோடும் சோழ நாட்டிற்கே உடைமை }
களமம் தழைக்கழனியாடும் உழையும்
(நெற்கதிர் தலை சாயும் வயலில் ஆடும் மானும் )
தடப்பள்ளி தழுவாத்துள்ளும் கயலும்
(வாய்க்காலில் தங்காமால் துள்ளும் மீனும் )
கொங்கையாடும் கொன்றை முடி மாந்தரும்
(அழகிய மார்புடைய தாமரையை தலையில் முடித்த பெண்களும்)
நிறைப்புண் தாங்கும் நரைமயிர் மூப்பரும்
(மார்பெங்கும் விழுப்புனுடன் முடி நரைத்த கிழவர்களும்)
வன்பகை கொய்த சோணாட்டினத்தே !
(கொடிய பகையை கூட வெட்டியெறிந்த சோழ நாட்டிற்கே சொந்தம்)
எழிலி முடியாடும் குடைந்தேற்றிய கோபுரம்
(உச்சியில் மேகங்களை முடியாக சூடும் செதுக்கி நிமிர்த்தப்பட்ட கோபுரங்களும்)
பழியில் அம்மை கரண்டையாடும் நூபுரம்
(குற்றமே இல்லாத அழகுடைய மாந்தர் தம் கானுக்காளில் ஆடும் சிலம்பும்)
ஒகரம் ஆடியுதிர் நீவி நூற்த்த சாமரம்
(மயிலாடி உதிர்ந்த இறகை நெய்த சாமரமும் )
ஞஞ்ஞையூட்டு நாரினர் அல்கியாடும் பூமரம்
(மதுவுக்கு ஒத்த போதையேற்றும் மாந்தர் கூடியாட தோதான பூமரமும் )
வாஞ்சங்கை எய்தும் சோணாட்டினத்தே !
(வானுயர் புகழ் கொண்ட சோழ நாட்டிற்கே உரியது)

No comments:

Post a Comment