அமெரிக்க டாலர் அம்பத்தி அஞ்சு ரூவாய்க்கு மேல உள்ள இந்த காலக்கட்டத்துல இந்திய ஒரு செல்வ செழிப்பான நாடுன்னு சொன்னா இன்னைய தேதிக்கு இது ஒரு மிக பெரிய ஜோக்கா தான் தெரியும். இன்னைக்கு உள்ள சந்ததிக்கு இன்னைல இருந்து 10,000 வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் இந்த நாடு எப்படி இருந்தது, எவ்வளவு செல்வத்தோட இருந்ததுன்னு புரியவைக்கிறது கொஞ்சம் கஷ்ட்டம் தான். ஏன்னா இங்கிருந்து கிட்டத்தட்ட எல்லாமே சுரண்டி எடுத்துகிட்டு போய்ட்டாங்க. ஒரத்தர் ரெண்டு பேரு இல்ல, முகம்மது கஸினவில துவங்கி இன்னைக்கு ஸ்விஸ்ல இருக்கும் கருப்பு பணம் வரை.
இந்தியாவ எப்புடியாவது புடிசிடனும் அப்படின்றது தான் நெறைய பேரோட கனவே இருந்தது அதுக்கு காரணம் இங்க கொட்டி கிடந்த செல்வம்.
இந்தியான்னு சொன்னதும் இன்னைக்கி உள்ள மேப்பை கைல வச்சிக்கிட்டு பாக்காதீங்க. இந்தியான்னு இந்த மண்ணுக்கு பேரு வந்ததுக்கு காரணமே சிந்து நதி தான். ஆனா, இப்போ அது பாகிஸ்தான்ல ஓடுது. பாகிஸ்தான் இன்னைய இந்தியா கொஞ்சம் அப்கானிஸ்தான் எல்லாம் சேந்தது தாங்க இந்தியான்னு சொன்னாங்க. சொல்லப்போனா பாகிஸ்தானும் நம்ம வடமேற்கு இந்தியாவும் சேர்ந்தது தான் இந்தியா.
இன்னைய இந்தியா எப்படி தோன்றுசின்னு பாத்துட்டு வந்தோம்ன்னா, ஏன் எவ்வளவு பேர் அருவாள தூக்கிகிட்டு இந்த மண்ணுக்குள்ள பூந்தாங்கன்னு பாத்துடலாம்.
சுமாரா 30ல இருந்து 18 கோடி வருசங்களுக்கு முன்னாடி இப்போ இருக்க மாதிரி 7 கண்டங்களா உலகம் கிடையாது. மொதல்ல ஒரே கண்டமா இருந்ததுங்க. அது பேரு பேன்ஜியா (Pangea). இது 30 கோடி வருஷத்துக்கு முன்னாடி துண்டு துண்டா இருந்த நிலங்கள் சேர்ந்து அதுக்கப்பறம் 17.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி உடைய ஆரம்பிக்குதுங்க. பேஞ்சியாவா இருக்கும் போது இதை சுத்தி இருந்த ஒரே பெருங்கடலுக்கு பேரு பேந்தலஸ்ஸா (Panthalaassa). பேன்ஜியா அப்படின்னா கிரேக்கத்துல "ஒரே மண்" அப்படின்னு அர்த்தம். பேந்தலஸ்ஸான்னா ஒரே கடல்ன்னு அர்த்தம்.பின்னாடி ஜுராசிக் காலத்தில் பூமி தட்டுகள் நகர்ந்ததால இது 7 கண்டமா பிரிஞ்சது. ஜுராசிக்ன்னா டைனோசர்ங்க நெனைப்புக்கு வந்தாலும் ஜுராசிச்ன்ற பேரு மேற்கு ஆல்ப்ஸ் மலை தொடர்ல இருக்குற ஜுரா மலைகளால வைக்கபட்ட பேர். ஜூரான்னா காடுகள் அப்படின்றது துணை சேதி.
இன்னைய இந்தியா அப்படின்றது ரெண்டு பெரும் நிலபரப்பு ஒன்னு சேர்ந்தது.சுமாரா ஏழரை கோடி ஆண்டுகள் முன்னாடி சூப்பர் கண்டத்துல இருந்து இன்னறைய தெற்கிந்திய தீபகற்பம் "கழட்டிக்கடா நேக்கா"ன்னு கழட்டிக்கிட்டு வந்து யுரேஷியன் ப்ளேட்ல வந்து மோதுச்சி. யுரேஷியன் ப்ளேட் அப்படின்றது, இந்தியாவோட மண்டைக்கு மேல கடலால பிரிக்கபடாத இரு கண்டங்களான யுரோப்பும் ஆசியாவும் சேர்ந்த நிலபரப்பு. யுரேஷியன் ப்ளேட்ல வந்து தெற்கிந்திய தீபகற்பம் மோதுனுதால நகராத யுரேஷியன் தட்டுல கொஞ்சம் சுருக்கம் விழுந்தது தான் இமாலய மலை தொடரும் காரக்கோரம் மலைத்தொடரும். ஹிமாலயான்னா சமஸ்கிரத்ததுல "பனியின் உறைவிடம்"ன்னு பொருள். காரக்கோரம்ன்னா "கருப்பு சரலைகள்"ன்னு பொருள். இந்த மோதல்ல தான் திபெத்தியன் பீடபூமியும் உருவாச்சு. உலகத்தின் கூரைன்னு சொல்லக்கூடிய அளவுக்கு திபெத்தியன் பீடம் மூணு மைல் உயரம். இப்படி மூணு மைல் உயரத்துக்கு பூமி கிளம்பும் போது கீழ இருந்து பிச்சிகிட்டு கிளம்பிய ஆறுகள் தான் இண்டஸ் அதோட கிளைகள் அப்பறம் கங்கையும் அதன் கிளைகளும். பூமியோட மேல் ஓடு சுமார் 30ல இருந்து 50கிலோமீட்டர் தடிமன் இருக்கும். பூமி இவ்வளவு பெருசா பிளந்துகிட்ட காரணத்தால கனிமவளம் இந்த ரெண்டு ஆறு வழியாவும் இந்த துணை கண்டத்தோட வடக்குலேயும் வடமேற்க்குலேயும் பாய்ஞ்சு அந்த பூமி முழுக்க வளமிக்கதா ஆகிடுச்சி.இண்டஸ் நதி ஓடுன படுகைகள்ல தங்க மண் பரவி கிடந்ததுன்னு சொல்றாங்க.இண்டஸ் நதிக்கு சிந்து அப்படின்ற சமஸ்கிரத பேர்தான் இயற்பெயர். சிந்துன்னா "அதிர்ந்து அசையும் பெரும் நதி அல்லது கடல் அல்லது நீராதாரம்"ன்னு பொருள்.
சரி இந்தியா இப்போ ரெடி ஆகிடுச்சி. இதுல இந்தியர்கள் எப்போ தோன்றுனாங்க ?
சுமார் சிந்து நதி பாய ஆரம்பிச்சு நாலைரை கோடி வருஷதுக்கப்பரம் தான் மனிதனோட நடமாட்டம் இந்திய துணை கண்டத்துல ஆரம்பிச்சது.
எல்லாரும் சொல்றா மாதிரி நாமும் மனிதர்கள் குரங்குல இருந்து வந்தாங்கன்னு தான் சொல்ல போறோம். இல்லன்னா இவ்ளோ வாலுத்தனம் நமக்கு இருக்கிறத நம்மால ஜஸ்டிபை பண்ண முடியாது அப்படின்றது ஒரு பக்கம் இருந்தாலும் மரபணுக்களும் அதையே சொல்றதால நாம அதைதான் ஒத்துக்கணும்.
இந்த மண்ல மனுஷங்க தோன்றியது பற்றி இன்னைய இந்தியர்களின் மக்கள் தொகை அளவுக்கு ஏகப்பட்ட கருத்திருக்குங்க. இதுக்கு அடிப்படை எதுன்னா, கிடைக்கும் தொல்பொருள் ஆதாரம். இதுவரைக்கும் கிடைச்சது தோண்டுனதை வச்சி தான் எல்லாருமே ஒரு கருத்துக்கு வராங்க. ஒவ்வொரு வாட்டி புதுசா எதாவது கிடைக்கும் போது முன்னாடி சொன்ன விஷயம் அவுட் டேடட் ஆகிடும்.
ஆனா முழுசா பொய் ஆகாது. அது ஒரு டைம் லைன்ல போய் உக்காந்துக்கும். ஏன்னா எல்லாமே உண்மைதான்.
மனுஷங்க இந்தியாவுல சுத்தி திரிஞ்சி வேட்டையாடுறதுக்கு முன்னாடி அவங்களோட க்ளோஸ் ரிலேடிவ்ஸான Bipedals அதாவது ரெண்டு கால்ல நிக்கிற குரங்கினங்கள் தான் இங்க பெரிய லெவல்ல ஆட்சி புரிஞ்சிருக்காங்க. Planet of the Apes. நம்ப முன்னோர்களை ஹோமினிட்கள் அப்படின்னு சொல்றாங்க ஹிஸ்டரி வாத்திங்க. ஹோமோ அப்படினாலே பழைய லத்தீன்ல மனிதன் அப்படின்னு தான் பொருள்.
இன்னைய உராங்குட்டானுக்கு முன்னாடி இங்க நம்ம மத்திய இந்தியாவுல இருந்த நம்ம தூரத்து சொந்த முன்னோர்கள் பேரு "சிவபிதகாஸ்". இந்த சிவபிதகாஸ் இந்தியாவின் வடக்கு அரணா ஓடுற ஷிவாலிக் மலைகள்ல சுத்தி திரிஞ்சதுக்கான ஆதாரங்கள் இருக்கு. சிவபிதகாஸ் இன்டிகஸ் என்னும் வகை சுமார் 22லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது. இதுகளோட தாடை அமைப்பு மனிதர்களோட ரொம்ப ஒத்து போனது.
அப்பறம் 19 லட்சம் ஆண்களுக்கு முன்னால் முதல் பழம்கற்கால மனிதர்களின் தடயங்கள் சிந்து நதி பக்கம் இன்றைய பாகிஸ்தான்ல 1983ல ரிவாத் அப்படின்ற எடத்துல கிடைச்சது. இது தான் நமக்கு தெரிஞ்சு இந்தியாவில முதல் மனிதனின் அடையாளம்.இவங்கள ரிவாத்தியன் மக்கள் அப்படின்றாங்க ஆராய்ச்சியாளர்கள்.
ரிவாத்தியர்களுக்கு அப்பறம் 14 லட்சம் ஆண்டுகள் கழிச்சி வாழ்ந்த மனிதர்களின் தடையங்கள் பாகிஸ்தான்ல இருக்கிற சோஆன் நதி படுகைல 1936ல கிடைக்கிறது. ரிவாதியர்களை பத்தி நமக்கு தெரியுற வரை சோஆனியர்களை தான் ஆதி சிந்து மனிதர்களாக நாம நினைச்சோம். இந்த சோஆனியர்கள் ஈட்டி, கோடாரி போன்ற கல் ஆயுதங்களை பயன்படுத்தி இருப்பது தெரியுது. நமக்கு இதுவரைக்கும் தெரிஞ்ச முதல் நவீன மனிதர்கள் இவங்க
ஆனா இதெல்லாம் ரொம்ப நாள் நிலைக்கலை.
டோபா பேரழிவு
இந்தோனேஷியாவின் சுமத்ராவுல இப்போ இருக்குற டோபா ஏரி இருக்கும் இடத்துல இருந்த எரிமலை வெடிச்சு நெருப்பை கக்கியதில உலகமே வேற மாதிரி ஆகிடுச்சி. டோபா ஏரியே கடல் மாதிரி இருக்கும்ங்க. 100 கிலோமீட்டர் நீளம் 35 கிலோமீட்டர் அகலம்.
74,000 வருஷத்துக்கு முன்னாடி இந்த எரிமலை வெடிச்சதுல மத்திய இந்தியாவுல உள்ள காடுகள் எல்லாம் அழிஞ்சி போச்சி. ஒரு உயிரினம் கூட இல்லை. இந்திய பெருங்கடல் வங்காள விரிகுடா தெற்கு சீன கடல் எல்லாம் வெறும் சம்பலா தான் இருந்ததாம். அதோட சாம்பல் படிமங்கள் இன்னும் இந்த கடல்களில் கிடைக்குதாம்.
இந்த Super Volcano eruption எரிமலை வெடிப்பு 800 கன சதுர கிலோமீட்டர்கள் சாம்பலை கக்கியது. இந்த சாம்பல் ஆறு வருஷத்துக்கு சூரியனோட வெளிச்சத்த இந்த பூமி மேல பட விடாம பண்ணியதில், பூமி மீண்டும் ஒரு ஐஸ் ஏஜுக்கு போய்டுச்சி. இந்த ஐஸ் ஏஜ் 1800 வருடங்கள் நீடிச்சது. இதுல மனித இனம் கிட்டத்தட்ட அழிஞ்சே போச்சுன்னு சொல்றாங்க.
அடுத்த பகுதில நாம கலாச்சாரத்தின் ஆரம்பத்தை பார்க்க போறோம். சிந்து சமவெளி கலாச்சாரம் மற்றும் அதற்கு முன்னான திராவிட கலாச்சாரம்.

அமெரிக்க டாலரில் தொடங்கி - திராவிட கலாச்சாரம் வரையில் வாசித்தேன், அருமையான தகவல்கள் அற்புதமான விவரங்கள் அறிந்தேன் மகிழ்தேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்... சி மோ சுந்தரர் அவர்களே. இவன் அன்புமுனுசாமி ஐந்தாம் வகுப்பு பழைய மாணவன்.நன்றி....