இருட்டு கண்களில் மங்குகிறது. எவனோ ஒருவன் என் சிந்திய குடலை அள்ளி திணிக்கிறான். வலிகள் மறத்துவிட்டன. காதை பிளக்கும் சத்தங்கள் இப்போது கேட்கவில்லை. ஓடும் எவனோ என் சிதைந்த காலை மிதித்து ஓடுகிறான். குறை சொல்ல மனம் வரவில்லை. வலி பழகிய ரணங்கள். பையில் அவள் படமும் பிள்ளைகள் படமும் இருக்கிறது எடுத்து பார்த்தவிட துடிக்கும் மனதிற்கும் துண்டித்து தனியே கிடக்கும் கைக்கும் தொடர்பில்லை. நரம்பில்லா தொடர்புகள் உறுப்புகளுக்கு மட்டும் இல்லை. வந்துவிடுவேன் என்று கூறிய வார்த்தைகளை பொய்யாக்கி கொண்டிருக்கிறேன். அவள் காத்திருக்க கூடும். என் மகளுக்குத்தான் காத்திருப்பு பிடிக்காது. மகனுக்கு உணரும் வயதே இல்லை. என் சிதைந்த உடலை ஒருவன் கால்களால் ஒதுக்கி ஓரமாய் விடுகிறான். என் கண்கள் அவனை வெறிக்கின்றன. அவனுக்கு கண் முழுக்க குற்றவுணர்வு. என் மகளின் செல்ல பெயர் அவன் அறிந்திருப்பானோ. என்னவளுக்கு சேதி தெரிந்திருக்குமோ. நான் தண்ணீரில் மூழ்கி காட்டும் விளையாட்டிற்கே அஞ்சி நடுங்கி மார்பில் முகம் புதைப்பாளே ? சிந்திய என் உடல் கண்டால் மாண்டே போவாளோ? நாளை நான் சென்று விடவில்லை என்றால் பள்ளிக்கு போகமாட்டாளே என் செல்ல இளவரசி. எழுந்துவிட துடிக்கிறேன், சாலையில் சிந்தி கிடக்கும் என் அவையங்கள் அனுமதி மறுக்கிறது. வாங்கிய சம்பளம் பையிலிருக்கிறது, யாரும் எடுத்து விட கூடும். மூன்றாம் தேதி மளிகைக்கு கொடுக்க வேண்டும், ஐந்தாம் தேதி பள்ளிக்கு கட்டணம், பால்காரன் வந்துவிடுவான். பையிலிருக்கும் பணம் பத்திரமா? வாங்கிய கேட்பரிஸ் சாக்கலேட்டும் அதனுடனே வைத்திருக்கிறேன். பணத்தை எடுப்பவன் புரிந்து கொள்வானோ அதில் என் குடும்பத்தின் அடுத்த மாத உணவிருக்கிறதென. காக்கியும் வெள்ளையுமாய் ஆட்கள் ஓடுகிறார்கள் என்னை இறந்தவனென்று கருதி. ஓலமிட துடிக்கிறது மனது காப்பாற்றிவிடு என. இருள் இப்போது கண்ணையும் மீறி பெரிதாகுகிறது. வழிகளும் சேர்ந்தே. மாலை வந்து துணியெடுக்க போகலாம் என்று சொல்லிவிட்டு வந்தேனே என் சின்ன ராணியிடம். இன்னும் காத்து கொண்டே இருப்பாளோ ? இனி அப்பன் வரமாட்டான் என்பதை ஏற்றுகொள்வாளோ ? நான் எந்த போரும் புரியவில்லையே என் மேல் ஏனடா தொடுக்கிறீர்கள்? வலி கூடுகிறது. இனியொரு குண்டு என் தலையருகே வெடிக்க ஆண்டவனை வேண்டுகின்றேன். விட்டு தான் போகிறேன் என்பதை விட இந்த காத்திருப்பு வலிக்கிறது.
Friday, 13 December 2013
அவள் விழி பார்வைகளை சந்திக்க முடிந்ததில்லை. பிரசாத் லேப் வாசலில் டீக்குடிக்க வரும் அனைவரிடமும் கை ஏந்துவாள். நடக்க இயலாத தள்ளாடும் தேகம். தலை சிக்கும் அழுக்கும் மண்டி கிடக்கும். வருடங்கள் வரிவரியாக முகமெங்கும். பசி கண்ணில் தெரியும். "சாப்டுறியா ?" என்று கேட்டால் ஆவலுடன் தலையாட்டுவாள். பிள்ளைகள் விட்டிருக்க கூடும். புத்தி பேதலித்திருக்க கூடும். வழி தவறி திணறி இருக்க கூடும். இத்தனை கூடும்களும் என் அனுமானம்தான்.
"என்ன பரிமளம், சாப்டியா ?" அவளுக்கு ஒத்த வயதுள்ள ஒரு வயோதிகர் அவளிடம் கேட்டார். ஈனமாக இல்லை என்று தலையாட்டினாள். பெரியவர் சோத்து பொட்டலம் தண்ணீர் பாக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போனார். எனக்கு ஆர்வம் அவரை பின் தொடர்ந்தேன், "ஐயா ! ஒரு நிமிஷங்க!". நின்று திரும்பினார். என் கையில் புகையும் சிகரெட்டை பார்த்தார். நான் அதை கீழே போட போக, "இல்ல ! புடிப்பா... எனக்கு குடேன்"
நான் என் சிகரெட் பாக்கெட்டை எடுத்து நீட்ட ஒரு சிகரெட்டை உருவி கொண்டார். இடுப்பில் சொருகி இருந்த தீப்பெட்டியால் பத்த வைத்து கொண்டார். "இன்னாப்பா ... கூப்ட ?"
"அந்த வயசானம்மா யாரு ? பேரு சொல்லி கூபிடுறீங்க?" தயங்கி தான் கேட்டேன்.
"ஒரு காலத்துல அவளுக்கு செம டிமாண்ட்ப்பா. கோடம்பாக்கதாண்ட வூடு வச்சி தொழில் பண்ணிகினு இருந்தா... நானெல்லாம் பார்த்து ரசிச்சதோட செரி.. செம காஸ்ட்லி மால்.... மவுசு கொறையோ கொறையோ ... ரயில்வே ஸ்டேசனாண்ட நின்னு பண்ண ஆரம்பிச்சா... அப்பறம் வயசு போய்ட்சி... தளந்து பூட்டா! எவன் வருவான் ? சோத்துக்கு வழி இல்ல. எங்காலத்துல இவளாண்ட ஒரு வாட்டி போய்டணும் இருந்தேன். பாவம்! இப்போ நென்ச்சி பாத்தா அப்போ நென்ச்சது அசிங்கமா இருக்கு. இளமைல பொறாமையா இருக்கும் இவள பாத்தா. எதோ என்னால முட்ஞ்சது, சோறு வாங்கி தருவேன்"
அவர் போய் வெகு நேரம் வரை நின்று கொண்டிருந்தேன். ரிடைர்மென்ட் எல்லா தொழிலுக்கும் பொருந்துவதில்லை. நமக்கு விவசாயம் சொல்லி கொடுத்த பெண்ணுக்கு நாம் பதிலுக்கு சொல்லி கொடுத்தது விபச்சாரம். ஊரார் உடல் பசி தீர்த்த அவளின் வயிற்று பசி தீர்த்து பிரயாச்சித்தம் செய்ய அவளை தேடினேன் அடுத்த நாள் சோறு வாங்கி தர.
அவள் இல்லை! வரமாட்டாள்!

Subscribe to:
Posts (Atom)